பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

0
126
#image_title

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

தேனீ மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, அந்த பள்ளியில் மட்டும். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பல பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

17 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் எங்களுக்கு பதவி உயர்வு வேண்டும். அதாவது பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் நாங்கள்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என்று பதவி உயர வேண்டும். என அம் மாவட்ட தலைவர் சந்திரனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், அனைத்து மாநிலத்திலும் உள்ள. ஊராட்சி, நகராட்சி அரசு பள்ளிகளில் பணியாற்றும், 6ம்-வகுப்பு,  7 ம்-வகுப்பு, 8 ம்-வகுப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு பதிலாக, பட்டதாரி ஆசிரியர்களை நியமானம் செய்யபடுவார்கள். என  ஜூன் 27, 2003-ல் அரசு அறிக்கைவிட்டது.

அதன்படி ஆசிரியர் தேர்வு மூலமும், பதவி உயர்வு மூலமும் தற்போது 20,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பின்னர் தொடக்க கல்வித்துறையை தவிர, ஆதிதிராவிடர் நலத்துறை, போன்ற துறைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி  உயர்வு கிடைத்துள்ளது.

எனவே தமிழகம் முழுதும் காத்திருக்கும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வுக்கு, உதவி செய்யுமாறும். ஒரு கூட்டத்தொடரில் மாவட்ட தலைவர் சந்திரனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

author avatar
Jayachithra