கொரோனா குறித்து குவைத் நாட்டின் புதிய அறிவிப்பு!

0
68

கொரோனா தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது மக்கள் யாரும் ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் குவைத் நாடும் தனது நாட்டிற்கு வெளிநாட்டினர் யாரும், இங்கு வருவதற்கு அனுமதி இல்லை என்று விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி வெளிநாட்டவர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடையானது தற்போது வரை நீடித்து வருகிறது. மேலும் அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தற்போது குவைத் நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டு மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குவைத் நாட்டை சேர்ந்த மக்கள் வேறு வெளிநாடுகளில் இருந்தால் அவர்கள் தங்களின் நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவ்வாறு வருகின்ற மக்கள் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டு அதன் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப் படுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Parthipan K