வெகுண்டெழுந்த ஜோதிமணி அடக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமை! காரணம் இதுதான்!

0
58

பாஜகவின் பெண் நிர்வாகி ஒருவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்த கே டி ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக உரையாற்றி சிக்கிக்கொண்ட சூழ்நிலையில், அவருக்கு எதிரான அறிக்கை வெளிப்படையாகவே வெளியிட்ட ஒரே அரசியல்வாதி ஜோதிமணி தான் என்று சொல்லப்படுகிறது.

கேடி ராகவன் வீடியோ விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்த ஜோதிமணி சென்ற சில தினங்களாகவே அமைதியான நிலைக்கு சென்று விட்டார். பாஜகவின் பெண் நிர்வாகியுடன் பாஜக மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் வீடியோ காலில் மிகவும் ஆபாசமாக பேசி கொண்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான அறிக்கை வெளிப்படையாக வெளியிட்டவர் ஜோதிமணி தான். அதோடு மட்டுமல்லாமல் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அவரை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனு அளித்து விட்டு வந்தார் அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக ராகவனை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இருந்தாலும் அத்துடன் ஜோதிமணி இந்த விவகாரத்தில் அமைதியாக சென்று விட்டார். இதற்கு காரணம் டெல்லியிலிருந்து ஜோதிமணிக்கு வந்த எச்சரிக்கை தான் என்று சொல்கிறார்கள். கே டி ராகவன் விவகாரம் அரசியலாக்க படவேண்டிய விஷயம் கிடையாது எனவும் இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் மற்றும் பாஜகவின் விவகாரம் என ஜோதி மணிக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் வரவே அவர் ஆகி விட்டார் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற விவகாரங்களில் தேவையில்லாமல் அரசியல் செய்வது பின்னாளில் நமக்கு பிரச்சினை ஆகிவிடும் என்று ஜோதிமணிக்கு கட்சியின் மேலிடம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேபோல சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது .அதில் ஆபாச வீடியோவில் சிக்கிய ராகவனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் ,அவருக்கு ஆதரவாக இருக்கும் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அழகிரி இந்த விவகாரத்தை கையில் எடுத்தது தேவையில்லாதது என மேடையிலேயே மகளிர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் எச்சரித்து இருக்கிறார். கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகின்ற நிலையில் அதற்கு எதிராகப் போராடுமாறு மகளிர் காங்கிரசாருக்கு நபர் உத்தரவிட்டு விட்டு சென்று விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு காரணம் ராகவன் விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட தகவல் தான் சொல்லப்படுகிறது அதோடு பாஜகவில் மட்டுமல்ல பெண் நிர்வாகிகள் பாலியல் ரீதியாக உடனே துன்புறுத்தப்படுவது அது குறித்த புகார்கள் இல்லாத கட்சிகளே கிடையாது என்ற சூழ்நிலையில், தேவையில்லாமல் அந்த கட்சியை சீண்டி அது நமக்கு பிரச்சனை ஆகிவிடும் அதுதான் காங்கிரஸ் கட்சி கண்டிப்பதற்கான காரணம் என கூறுகிறார்கள்.