கே எஸ் அழகிரி மத்திய அமைச்சர் பற்றி தெரிவித்த அந்த கருத்தால் வெடித்தது சர்ச்சை! கடும் கோபத்தில் மத்திய அரசு!

0
75

அமித்ஷாவை பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்து இருக்கின்றாரா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எதிர்வரும் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார், என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு புது உத்வேகத்தை தரும், எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும், என்றும் தமிழகத்திற்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க இருக்கின்றோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் உள்துறை அமைச்சர் வேல் யாத்திரையில் பங்கேற்க மாட்டார், அதோடு பாஜக மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால், முதல்வரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில், எல் முருகனின் உள்துறை அமைச்சரின் தமிழக வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கும் என்ற கருத்திற்கு பல தரப்பினரும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அவரைப் பார்த்து பயப்படுவதற்கு அமித்ஷா என்ன தீவிரவாதியா? அல்லது அவர் கையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் வருகின்றாரா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

ஒரு ஜனநாயக நாட்டில் யாரை பார்த்தும் பயப்பட வேண்டியது இல்லை. முக்கியமாக இந்த தமிழக மண்ணில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள் முருகன் தொடர்ச்சியாக கற்பனை உலகில் வாழ்ந்து வருகின்றார் என்று தெரிவித்தார்.