கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படம்!! ஹீரோவாக ஜெயம் ரவி!!

0
252
Krithika Udayanidhi's next film!! Jayam Ravi as hero!!
Krithika Udayanidhi's next film!! Jayam Ravi as hero!!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படம்!! ஹீரோவாக ஜெயம் ரவி!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியின் நடிப்பில் இறைவன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக சைரன் என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி கமிட் ஆகி உள்ளார். எம். ராஜேஷ் இயக்கும், காமெடி ஜானர் திரைப்படம், முத்தையா இயக்கத்தில் கிராமத்து படம், இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் புவனேஷ் இயக்கத்தில் ஒரு படம், அடுத்ததாக அகமது இயக்கும் ஜன கன மன என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

இப்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். கிருத்திகா உதயநிதி ஏற்கனவே மிர்ச்சி சிவாவை வைத்து வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த காளி போன்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் இயக்கியுள்ளார். ஜெயம் ரவியை வைத்து இயக்கும் படம் அவருடைய 3 வது திரைப்படமாகும்.

இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு 33வது திரைப்படமாகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என தெரிகிறது.

author avatar
CineDesk