மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

0
162

மகாவிஷ்ணு எண்ணற்ற அவதாரங்களை மேற்கொண்டிருந்தாலும் அந்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரங்கள் தான் தசாவதாரம் என்று சொல்லப்படும் அவதாரங்கள் அதேபோல அவருக்கு எண்ணற்ற பெயர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 12 திருநாமங்கள் மிகவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.கேசவன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், நாராயணன், ரிஷிகேஷ், வாமனன், ஸ்ரீதரன், தாமோதரன், பத்மநாபன் ஆகிய பன்னிரண்டு நாமங்கள் தான் அவருக்கு மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.இந்தப் பன்னிரண்டு திருநாமங்களையும் கோவிந்தன் என்ற திருநாமம் மிகவும் சிறப்பானது. இதற்கு ஆசை இல்லாதவன் என்று பெயர் என்று சொல்லப்படுகிறது. மனதளவில் பிரமச்சாரி ஆனவன் என்று பொருள்.

கோபியர்களுடன் பல லீலைகளை புரிந்தவன் எப்படி பிரம்மச்சாரி ஆவார் கேள்வி பலரின் மனதில் எழலாம் இங்கு லீலை என்பது விளையாட்டை குறிக்கும் சொல். பெண்களுடன் கண்ணன் ஆடிப்பாடி மகிழ்ந்து இருந்த சமயத்தில் அவனுக்கு ஒன்பது வயது என சொல்லப்படுகிறது. அந்த பாலகனின் வயதில் அவருடைய விளையாட்டுக்கள் சிறு குழந்தைகளுக்கு உரிய செயல்பாட்டு அளவிலேயே இருக்கும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். மகாவிஷ்ணுவின் அவதாரம் என்ற காரணத்தால் மட்டும் கண்ணனை அந்த ஒன்பது வயது வாலிபனைப் போல் யாரும் நினைத்துவிட வேண்டாம்.

திரௌபதிக்கு துரியோதனன் அரசவையில் அவமானம் நேர்ந்தபோது திரௌபதி கிருஷ்ணனை கோவிந்தா என்று தான் கூறி அழைத்தார். அதன் காரணமாக தான் கிருஷ்ணன் அந்த சபைக்கு நேரடியாக வந்து திரௌபதிக்கு உதவி புரியவில்லை. வெறும் ஆடையை மட்டும் அனுப்பி அவருடைய மானத்தை காத்திருக்கிறார் நேரடியாக வந்தால் துரியோதனன் சபையில் இருப்பவர்களை போலவே கண்ணனும் திரவுபதியின் மானத்தை இழந்து நிற்கும் அந்த அலங்கோல காட்சியைக் காண நேரிடும். அதோடு மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் திரௌபதிக்கு தேவைப்பட்டது அவருடைய மானத்தைக் காப்பதற்காக ஆடை மட்டுமே ஆகையால் தான் கண்ணன் அந்த சபைக்கு நேரடியாக வராமல் தன்னுடைய அருளால் ஆடையை மட்டும் திரௌபதிக்கு வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித்துக்கு முடிசூட்டு விழா நடைபெற இருந்த சமயத்தில் பிரம்மச்சாரியான ஒருவர் சூட்டினால் தான் அவனுடைய தலையில் மணிமுடி நிற்கும் என்ற விதி இருந்தது. அப்போது அதை சூட்டியவர் கிருஷ்ணன் தான் என்று சொல்லப்படுகிறது.