கொங்குமண்டலம் அதிமுகவிற்கா…? திமுகவிற்கா…? மல்லுக்கட்டும் தலைமைகள்…!

0
70

திமுகவும் சரி அதிமுகவும் சரி ஒரு சில கட்சிகளை ஓரங்கட்டி வைத்து விட்டு இறங்கினால் கொங்கு மண்டலத்தை தங்களிடம் மொத்தமாக தக்க வைத்துக்கொள்ள முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர் அதோடு திமுகவினர் அருந்ததியர் சமூகத்துக்கான ஓட்டுக்களை கவர்வதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாளர் சமூக மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் அது போல முதலியார் மற்றும் அருந்ததியினர் ஆகியோரும் பெரும்பான்மையாக இருந்து வருகிறார்கள் ஆகவே கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்று சொல்வார்கள்.

கொங்கு மண்டலத்தில் இருப்பவர்கள் அனைவரும் எம்ஜிஆர் அவர்களுடைய ரசிகர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனாலேயே அங்கு அதிமுக காலம் காலமாக வெற்றி பெற்று வருகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்த முறை வெற்றியை தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு கட்சியை உருவாக்கி வைத்துள்ளனர்.

ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் சென்ற முறை தங்களுடைய வெற்றி வாய்ப்பினை இழந்துவிட்டது. இந்த நான்கு வருட காலமாக கொங்கு மண்டலத்தை தங்கள் சார்பில் வளர்க்காமல் இருந்து விட்டது. ஆனால் இப்போது தேர்தல் வரும் நேரத்தில் தான் கொங்கு மண்டலத்தில் தங்களது கவனத்தை திருப்பி இருக்கிறார்கள் திமுக நிர்வாகிகள். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியை பிடிக்க முடியாததற்கு முக்கியமான காரணம் இந்த கொங்கு மண்டலத்தை திமுக கவனத்தில் கொள்ளாதது தான் என்று பரவலாக பேசப்படுகிறது.

என்னதான் திமுகவினர் முயற்சித்தாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மட்டுமே இருப்பார்கள். இந்த சூழ்நிலையில் என்ன செய்ய இருக்கிறது திமுக என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஆனாலும் கவுண்டர் சமூகத்தை தவிர அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட மற்ற சமுதாயத்தினரின் ஓட்டுகளை எப்படி வாங்குவது என்று திமுக திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது.