கோடநாடு விவகாரம் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளி! எடப்பாடிக்கு பாதகமா சாதகமா?

0
60

கடந்த 2016 ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வரும் அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அதிமுகவின் ஒட்டுமொத்த பிம்பமாக திகழ்ந்து வந்த ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அந்த கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்தார்கள். ஜெயலலிதா உயிரிழந்த சமயத்தில் அவருக்கு பதிலாக முதலமைச்சராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மரணத்திற்கு பின்னால் சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவர் தன்னுடைய முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதோடு நின்று விடாமல் என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்து விட்டார்கள் என்று தெரிவித்து மெரினாவில் இருக்கக்கூடிய ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு தர்ம யுத்தத்தை தொடங்கினார். ஒருபுறம் சசிகலா அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரையும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ரிசார்டில் தங்க வைத்திருந்தார். இப்படிப் போய்க்கொண்டிருக்க 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜெயலலிதா ,சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீது போடப்பட்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சுதாகரன் இளவரசி உள்ளிட்ட மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னால் முதலமைச்சராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமனம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன்பின்னர் ஓரிரு நாட்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றிபெற்றார்.இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் அங்கு இருந்த நபர்களை கொலை செய்து விட்டு சில முக்கிய ஆவணங்களை ஒரு சிலர் திருடிச் சென்று விட்டார்கள். இந்த சம்பவம் அப்போது முதல் இப்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் குற்றவாளிகளாக 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது அதோடு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் அந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருக்கின்ற 10 நபர்களில் 9 நபர்கள் சத்தமும் ஜாமினில் வெளியே இருக்கிறார்கள் ஆனால் வாளையார் மனோஜ் மட்டும் இதுவரையிலும் கொன்னூர் கிளை சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.இதற்கு காரணமாக கூறப்படுவது நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தும் கூட அதன் நிபந்தனைகளை அவர் சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது கோவை அல்லது நீலகிரியை சார்ந்த 2 நபர் ஜாமீன் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் சொத்துக்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிணை காண நிபந்தனைகளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இருந்தாலும் அவருக்கு நீலகிரி அல்லது கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஜாமின் கையெழுத்து போட யாரும் முன் வரவில்லை. அவர் கேரளாவைச் சார்ந்தவர் என்ற காரணத்தால், அவருக்கு ஜாமின் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ,மனோஜின் வழக்கறிஞர் முனிரத்தினம் நீலகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் நீலகிரி கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் ஜாமீன் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சற்று தளர்த்தி கேரளாவில் இருக்கின்ற அவருடைய ரத்த உறவுகள் உத்தரவாதம் தருவதற்க்கன அனுமதியை வழங்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.இதனைத் தொடர்ந்து அவருடைய ரத்த உறவுகள் மூலமாக உத்தரவாதம் குறைக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் வாளையார் மனோஜ் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படுவார் என்று சில நாட்களாகவே செய்திகள் வெளியாகின.

இதனை தெரிந்துகொண்ட அரசுத் தரப்பு உங்களுடைய ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த எங்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வராது ஆனால் அதற்கு மாறாக நீங்கள் எடப்பாடிக்கு ஆதரவாக எதுவும் பேசக்கூடாது. என்று டீலிங் பேசி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனடிப்படையிலேயே அரசுத்தரப்பு இந்த ஜாம் இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் ஊட்டி வழக்கறிஞர் வட்டாரங்கள் சொல்கிறது.

ஆகவே மனோஜ் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசப் போகின்றார்? அல்லது இதழாக பேசப் போகின்றார்? என்பது அவர் பிணையில் வெளிவரும் ஒரு சில தினங்களுக்குள் தெரிந்துவிடும் என்கிறார்கள்.