கோடநாடு வழக்கு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு நடுக்கத்தில் அதிமுக!

0
86

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பகுதியில் சென்ற 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி பதினோரு பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. அந்த சமயத்தில் ஓம் பகதூர் கிருஷ்ண பகதூர் என்ற காவலாளிகளை அந்த கொள்ளை கும்பல் கொலை செய்தது.இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்த சூழ்நிலையில், அவரை 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஆத்தூரை அடுத்த சங்ககிரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்தார்.

சென்றாய 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்தார்கள் அந்த குற்றப்பத்திரிகையில் 11 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 97 பெயர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருடன் இணைந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கொடநாடு கொலை மற்றும் கொள்ளைக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தினார்கள்.

தற்சமயம் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் இந்த அரசு கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கை மேலும் விசாரணைக்காக மீண்டும் தூசி தட்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு இன்று ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது கடந்த 13 தினங்களில் யார் யாரிடம் எல்லாம் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவலை காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் ஒரு மாதகால அவகாசம் கேட்டு இருப்பதன் காரணமாக, இந்த விசாரணை அறிக்கையை தற்சமயம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூடிய வாய்ப்பு இல்லை எனவும், தெரிய வந்திருக்கிறது. அதுபோல கொடநாடு வழக்கில் கூடுதலாக மேலும் ஒரு சிலரை விசாரணை செய்ய காவல் துறை சார்பாக அனுமதி கேட்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இதற்கு நடுவில் கோடநாடு வழக்கில் காவல்துறையினரின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து அதிமுகவின் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இருக்கிறது வழக்கின் எந்த ஒரு கட்டத்திலும் விசாரணை இன்னும் விரிவுபடுத்தப்பட இயலும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கின்றது. ஆகவே இந்த காவல்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்றைய தினம் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் காவல் துறை மூலமாக இந்த கொடநாடு வழக்கை மறுபடியும் விசாரணை செய்வது கண்டிக்கத்தக்கது என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். இந்த நிலையில், தற்சமயம் உயர் நீதிமன்றம் கூடுதல் விசாரணை நடத்துவதற்கான அதிகாரம் காவல்துறைக்கு இருக்கிறது என்று உத்தரவிட்டு இருப்பது இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here