கோடநாடு வழக்கு! தேவைப்பட்டால் அதையும் செய்ய நாங்கள் தயார் காவல்துறையினர் அதிரடி!

0
71

கோடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் உள்ளதால் அந்த வழக்கை நீலகிரி காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்து வருகிறார்கள்.

அதற்காக அமைக்கப்பட்ட வருகின்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை காவல்துறையினர் பல விதமாக விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

முக்கிய குற்றவாளியான சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என்று 40க்கும் அதிகமான அவர்களிடம் காவல்துறையினர் விசாரணையை செய்து அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களில் கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணியாற்றிவந்த தினேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். கொடநாடு எஸ்டேட்டின் வரவு செலவு கணக்குகளை கண்காணித்து வந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது குறித்து மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் அந்த சமயத்தில் புகார் கூறினார்கள். இதுதொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் கண்பார்வை மங்கியது காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்கள்.

இந்த நிலையில்தான் கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற இருப்பதால் தினேஷ் குமார் கொலை வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் வலியுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து தினேஷ்குமார் வழக்கையும் மீண்டும் விசாரிக்க தனிப்படை காவல்துறையினர் முடிவு செய்தார்கள்.

இதனையடுத்து கோத்தகிரி தாசில்தாரை சந்தித்த தனிப்படை காவல்துறையினர் தினேஷ்குமார் மரணம் குறித்து மறுபடியும் விசாரணை மேற்கொள்வது குறித்த மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள் அதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து தினேஷ்குமார் வழக்கை நேற்றைய தினமே காவல் துறையினர் விசாரிக்க தொடங்கிவிட்டார்கள். தினேஷ்குமார் சொந்த ஊரான கோத்தகிரி அருகே கெங்கரைக்கு நேற்று மாலை மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் 5 பேர் சென்று இருக்கிறார்கள். அவர்கள் கெங்கரையில் இருக்கக்கூடிய தினேஷ் குமாரின் தந்தை போஜனை தனியாக அழைத்து வந்து விசாரணை செய்து இருக்கிறார்கள்.

தினேஷ்குமார் எவ்வாறு உயிரிழந்தார்? அவருடைய மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றன, நெருக்கடி காரணமாக, அவர் தற்கொலை முடிவை மேற்கொண்டார் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கிறார் அந்த தகவல்களை காவல்துறையினர் வாக்குமூலமாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

தினேஷ்குமார் தந்தையை தொடர்ந்து அவருடைய உறவினர் இடமும் மற்றும் அவருடன் பணிபுரிந்த எஸ்டேட் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை செய்ய இருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு தினேஷ்குமார் தற்கொலை வழக்கு சந்தேக மரணம் வழக்காக மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது. தினேஷ் குமாரின் உடலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை செய்யவும் காவல் துறையினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.