பிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே! வீரபாண்டி ராஜாவின் மரணத்தால் கதறும் உடன் பிறப்புகள்!

0
80

தற்போதைய திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனுமான வீரபாண்டி ராஜாவின் திடீர் மறைவு திமுகவின் பலரையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஆனா இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் வீரபாண்டி ராஜா தன்னுடைய தந்தை இறக்கும் வரையிலும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவரிடம் ஆசி வாங்கும் வீரபாண்டி ராஜா தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தான் தன்னுடைய பிறந்தநாளை நிகழ்வுகளையே ஆரம்பிப்பார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல இன்றைய தினமும் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் அமைந்திருக்கின்ற வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து புறப்படும் சமயத்தில் மயங்கி சரிந்து இருக்கிறார் வீரபாண்டி ராஜா. லோ பிபி என்று நினைத்து உடனடியாக அவரை காரில் ஏற்றிக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு போன சமயத்தில் கொண்டு செல்லும் வழியிலேயே ராஜாவின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்தது.

சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கம், கடந்த சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பு மறுப்பு, உள்ளிட்ட காரணங்களால், விரக்தியில் இருந்த வீரபாண்டி ராஜா கடந்த சில நாட்களாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் முதன்மைச் செயலாளர் நேரு மீது நம்பிக்கையாக ஒரு சில வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

சென்ற வருடம் தன்னுடைய பிறந்த நாளன்று நோய்த்தோற்று காரணமாக, யாரையும் சந்திக்காத வீரபாண்டி ராஜா அதன்பின்னர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி திருச்சி சென்று நேருவை நேரில் சந்தித்து இருக்கிறார். அதன் பின்னர் பலமுறை நேருவை நேரில் சந்தித்து பேசியதாக செல்லப்படுகிறது. நேரு அண்ணன்தான் தலைவருக்கும், எனக்கும், பலமாக உள்ளார் மிக விரைவில் நல்ல செய்தி வரும் என்று சொல்லியிருக்கிறார். இதனால் நம்பிக்கையாக இருப்போம் என தெரிவித்து வந்திருக்கிறார் வீரபாண்டி ராஜா.

அமைச்சர் கே என் நேரு அவர்களுக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மிகுந்த மரியாதை உண்டு, அதே போல அதிரடியாக துடிப்பாக செயல்படும் ராஜா போன்ற கட்சி நிர்வாகிகளையும், நேருவுக்கு மிகவும் பிடிக்குமாம். அந்த இடத்தில் ராஜாவுக்காக தலைவர் ஸ்டாலினிடம் உரையாற்றியிருக்கிறார். மிக விரைவில் நல்ல செய்தி வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தோம் ஆனால் இன்று அவருடைய பிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டது என்று கதறிக் கொண்டு இருக்கிறார்கள், ராஜாவுக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகள்.