திமுகவில் அடுத்தடுத்து கிளம்பும் வாரிசு அரசியல் புயல்! என்ன செய்ய இருக்கிறார் முதலமைச்சர்?

0
75

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி என்று வந்தாலே வாரிசு அரசியல் மங்கி கிடக்கிறது என்று பலரும் தெரிவிக்கும் விதத்தில் அந்த கட்சிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

அந்த விதத்தில் முதலில் காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டோமானால் முதலில் ஜவகர்லால் நேரு, அவருக்குப் பிறகு இந்திராகாந்தி, அவருக்குப் பின்னால் ராஜீவ்காந்தி, அவருக்குப் பின்னால் தற்போது ராகுல் காந்தி, என்று இப்படி அந்த கட்சியில் வாரிசு அரசியலின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், முற்காலத்தில் அறிஞர் அண்ணாதுரையால் தொடங்கப்பட்ட திராவிடர் முன்னேற்றக் கழகம் அவர் எழுச்சியுடன் இருக்கும் வரையில் வீறுநடை போட்டு வந்தது கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் அவர் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து இருந்தார். அப்போது திமுக என்ற கட்சி தமிழகத்தில் அசைக்கமுடியாத அரசியல் அங்கீகாரம் பெற்றுக் கொண்டதோடு பொதுமக்கள் இடையேயும் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றிருந்தது.

ஆனால் அவர் மறைவுக்குப் பின்னால் எழுந்த அரசியல் குளறுபடி காரணமாக, அப்போதைய திமுக வின் பொருளாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதன் பின்னர் அவர் புதிதாக ஒரு கட்சியை தொடங்கி ஆட்சியைப் பிடித்தது எல்லாம் வேறு கதை.ஆனால் திமுக என்ற மாபெரும் இயக்கம் கருணாநிதி வசம் வந்ததிலிருந்தே அந்த கட்சி குடும்ப அரசியலுக்கான களம் என்று தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கூட பெயரெடுத்து விட்டது.

அப்போதைய அந்த கட்சியின் தலைவர் கருணாநிதி அவருடைய மகனான ஸ்டாலின் அவர்களை முதன்முதலாக கட்சியில் இணைக்கும்போது இளைஞரணி செயலாளர் பதவியில் தான் அமர வைத்தார். அதன் பின்னர் ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து துணை முதலமைச்சர், கட்சியின் பொருளாளர், செயல் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் என வளர்ந்து வந்தவர் தற்சமயம் முதலமைச்சர் என்ற மிகப்பெரிய இலக்கை அடைந்து விட்டார்.

கருணாநிதி இதை மட்டும் செய்யவில்லை தன்னுடைய சொந்த பந்தங்கள் என்று எல்லோரையும் திமுகவில் இணைத்து அவர்களையும் அரசியலில் இழுத்து விட்டார். கருணாநிதியின் மகளான கனிமொழி, மருமகனான தயாநிதி மாறன், முரசொலி மாறன், அழகிரி என்று தன்னுடைய ஒட்டுமொத்த உறவுகளையும் கொண்டு வந்து திமுக என்ற கட்சி நாளடைவில் கருணாநிதியின் குடும்ப சொத்தாகவே மாறிவிட்டது.

கருணாநிதியின் காலத்தில் இப்படி என்றால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் கருணாநிதி மரணம் அடைந்த அடுத்த நொடியே தன்னுடைய ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களை கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டார். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் தன்னுடைய தந்தை முதன் முதலில் தன்னை எந்த பதவியில் அமர வைத்தாரோ அதே பதவியில் தான் தற்போது ஸ்டாலின் தன்னுடைய மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமர வைத்தார்.

அதன் பிறகு சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் அவளை நிற்கவைத்து சட்டசபை உறுப்பினராகவும் ஆகிவிட்டார். இன்னும் சொல்லப்போனால் இன்னும் சற்றேறக்குறைய 6மாத காலத்தில் அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்க இருக்கிறார் என்று திமுக வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுகின்றது.இந்த நிலையில், திமுகவின் அமைச்சர் கே என் நேரு தன்னுடைய மகனை அரசியல் களத்தில் கால் பதிக்க வைக்க இருக்கிறார் என்று பேச்சு மலைக்கோட்டை நகரம் முழுவதும் சுற்றி வருகிறது.

திமுகவில் எப்போதும் பேசப்படும் அல்லது மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படும் ஒரு விஷயம் வாரிசு அரசியல் திமுகவில் ஏதாவது ஒரு முக்கிய பதவியில் அமர்ந்து விட்டால் போதும் அப்படியே காலாகாலத்திற்கும் வந்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் இன்னமும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

அதிலும் திமுகவின் தலைமையை நோக்கிய வாரிசு அரசியலை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்றும் தற்சமயம் கிருத்திகா உதயநிதி வரையில் வாரிசு அரசியல் விவகாரம் பூதாகரமாக பேசப்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் புகார் பட்டியல் வாசித்து வருகின்றனர்.

திமுக தலைமை மட்டுமல்ல அதன் அடுத்த இடத்தில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்களுடைய அரசுகளை தலைமுறைக்கு வருவது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. அதில் தற்போது அமைச்சர் கே என் நேரு தன்னுடைய மகன் அருண் நேருவை களமிறக்க இருக்கின்றார் என்ற பேச்சுக்கள் திருச்சி மலைக்கோட்டை நகரம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கிறது.

திமுகவிற்கு எப்படி தலைநகர் சென்னை பலம்வாய்ந்த கோட்டையாக இருக்கிறதோ அதே போல தான் திருச்சியில் கட்சியின் முக்கியமான மாநாடுகள், அரசியல் காய்நகர்த்தல்கள் அனைத்தும் திருச்சியில் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. திருச்சிக்கு தற்சமயம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே என் நேரு என்ற இரு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

இவர்களின் போட்டா போட்டி அரசியல் உடன்பிறப்புகளை அதிரிபுதிரி ஆக்கி இருக்கின்றது. திருச்சியின் இருபெரும் தலைவர்களின் கோஷ்டி அரசியல் மலைக்கோட்டை மாவட்டத்தை சூடாக்கி வருகின்றது மூத்த தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் கே என் நேரு.

இவர் ஸ்டாலினுக்கு எந்த அளவுக்கு நெருக்கமோ அதேபோல தற்சமயம் அடுத்த தலைமுறை அரசியல்வாதியாக இருக்கும் உதயநிதிக்கு மிக நெருக்கமான நண்பர் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சியில் தற்சமயம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதிக்கம் தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

சென்ற மாதம் ஆரம்பத்தில் இருந்தே அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கே என் நேரு உள்ளிட்டோரின் கோஷ்டி அரசியல் காரணமாக, திருச்சி மாவட்ட திமுக திக்குமுக்காடி கொண்டு இருப்பதாக செய்திகள் அடிபட்டு வருகின்றன. சென்ற மாதம் கேஎன் நேருவின் பிறந்தநாள் காரணமாக, திருச்சி வண்ணமாகவும், சுவரொட்டிகள் மயமாகவும் மாறியிருந்தது. வழக்கமாக மீசையை முறுக்கிக்கொண்டு மலைக்கோட்டையின் மாமனிதனே, திருச்சி கோட்டையின் மன்னனே என்று வாசகங்களுடன் வாழ்த்து மடல் ஒட்டப்பட்டு இருந்தாலும். அதில் நேருவின் மகன் அருண் நேருவின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள்.

தம்முடைய வாரிசை களம் இறக்கும் நடவடிக்கைகளில் கே என் நேரு இறங்கி விட்டார் என்று புகார் பத்திரம் வாசித்து வருகிறார்கள் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் மழை, வெள்ள பாதிப்புகளை பற்றி பார்வையிடுவதற்காக திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினை தன்னுடைய மகனுடன் கே என் நேரு சந்தித்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்து வலம்வந்த கல்வி அமைச்சரின் ஆதரவாளர்கள் சென்ற டிசம்பர் இரண்டாம் தேதி அன்று கல்வி அமைச்சரின் ஆதரவாளர்கள் திருச்சியை சுவரொட்டிகளாலும்,பெயர்களாலும் அதகளப்படுத்தி இருந்தார்கள். விதிகள் மீறப்பட்டதால் அவற்றை அகற்ற கல்வி அமைச்சர் உத்தரவு போட்டது தனி கதை என்கிறார்கள்.

அதற்கு தற்சமயம் பதிலடியாக கே என் நேரு வின் ஆதரவாளர்கள் எதிர்வரும் 12ஆம் தேதிக்காக காத்திருக்கிறார்கள் அன்றைய தினம் அருண் நேருவின் பிறந்தநாள் அதேசமயம் கல்வி அமைச்சரின் ஆதரவாளர்களும் என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பாக ஆவல் கொண்டு இருக்கிறார்களாம்.