டெல்லிக்கு சென்றேன் ஆனால் பாஜக வில் இணையவில்லை! அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ!

0
108

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக காலையில் தகவல் வெளியானது.

திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது இதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்த மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால் ,மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த கு.க செல்வம் இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அவர்களுடன் டெல்லி சென்றார், மாலையில் பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது திமுக வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லி சென்று வந்த கு.க செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியில் நான் சேரவில்லை டெல்லியில் தொகுதி பிரச்சனைக்காக அமைச்சர் செல் கோயலை சந்தித்தேன்.

ராகுல் காந்தியுடனான உறவை திமுக துண்டிக்க வேண்டும்
திமுகவில் உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் மேலும் தமிழ்கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை முக.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

author avatar
Parthipan K