கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

0
150

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமலின் டிவிட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்துக் கருத்துகளையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றன. தேசிய கட்சியானக் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்ல. இதையடுத்து காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஷர்ம்ஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டதை ஒப்புக் கொள்கிறேன். இதில் நானும் எனது பங்கை ஏற்றுக்கொள்கிறேன் ”என்று தெரிவித்து தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தனது நண்பரும் ஆம் ஆத்மியின் வெற்றி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுகு கமல் டிவிட்டரில் வாழ்த்துக் கூறினார். அப்போது ‘அரவிந்த கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்கள் வளர்ச்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆம் ஆத்மி கட்சியை வெற்றிப் பெறச் செய்துள்ளனர். இதைப்போல தமிழக மக்களும் வருகின்ற  தேர்தலில் முடிவெடுப்பர். நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்வோம்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த டிவிட்டுக்கு கமெண்ட் செய்த நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ‘நேர்மை மற்றும் வளர்ச்சிக்குப் பெயரே நீங்கள் தான் சார்’ எனக் கூறியுள்ளார். இது கமலுக்கு அளிக்கும் பாராட்டா அல்லது கேலியா எனப் புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K