தன்னுடைய கனவை நனவாக்குவதற்காக ஐடி கம்பெனி வேலையை விட்ட கேஜிஎப்-2 நடிகை!

0
102

ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி ஒரு இந்தியா மாடல் மற்றும் அழகுப் போட்டியில் பட்டம் பெற்றவர். இவருடைய சிறுவயதிலேயே இவருடைய தாய் உயிரிழந்துவிட்டார். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதோடு மாடலிங் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது.

ஆனாலும் படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் படித்துவிட்டு ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய தந்தையிடம் வேலையை விட்டுவிட்டு மாடலிங் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார்

இதற்கு அவருடைய தந்தை சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மணப்புரம் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்று கர்நாடகா மற்றும் பியூட்டிஃபுல் ஸ்மைல் பட்டங்களை பெற்றார். அதன் பிறகு மனப்புரம் மிஸ் குயின் ஆஃப் இந்தியாவில் பங்கேற்றார்.

அங்கே அவர் முதலாவது ரன்னர் அஃப்பாக முடிசூட்டப்பட்டார். அதன் பிறகு கன்ஜினியாலிட்டி என்றும் பெயரிடப்பட்டார் அக்சென்ச்சர் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் போது மாடலாகவும் பணிபுரிந்தார்.

மிஸ் சூப்பர் நேஷனல் பட்டத்தை வென்ற பிறகு அவருடைய புகைப்படங்கள் செய்தி தாள்கள், இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெறத் தொடங்கினார்.

இவர் 2018 ஆம் வருடம் கன்னட பீரியட் ஆக்சன் படமான கேஜிஎப் -1ல் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.