மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சபரிமலைக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த சோதனை

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சபரிமலைக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த சோதனை
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு பிறகு அய்யப்ப பக்தர்கள் மற்றும் பெரும்பாலான மக்களின் போராட்டத்தையும் மீறி கனக துர்கா மற்றும் பிந்து என்ற இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல் பெரும்பாலான மக்கள் மற்றும் பக்தர்களின் போராட்டத்தை மீறியும் சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு எதிராக எதிர்ப்பு குரல் கிளம்பியது அதனால் அவர்கள் காவல் துறையினரின் பாதுகாப்பில் சில நாட்கள் இருந்தனர்.
இந்நிலையில் தனது வீட்டிற்கு சென்ற கனக துர்காவை அவரது மாமியார் அடித்து விரட்டியுள்ளார்.அவரது கணவரும் இவர் வீட்டிற்கு வருவதை தடுத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனக துர்காவை அவரது சகோதரரும் வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை.இதனால் வேறு வழியில்லாமல் அவர் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளார். மக்களின் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு சென்றதற்காக அய்யப்ப சாமியிடமும் இந்து மக்களிடமும் மன்னிப்பு கேட்காமல் வந்தால் இவரை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர்.
சமீபத்தில் தான் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்த பெண்களுக்கு கேரளா அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Kerala Women Kanaka Durga Barred from Home Forced to Shelter

Copy
WhatsApp chat