கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதலில் ரகசிய தகவலை வெளியிட்ட கேரள காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்!!

0
100
#image_title

கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ரகசிய விபரங்களை கசிய செய்ததாக கேரளா காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்!

கேரள மாநில காவல் துறையில் ஐஜி ஆக செயல்பட்டு வந்த விஜயன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏலத்தூர் ரயில் பயணிகள் மீது தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைய்பி தொடர்பான சில ரகசிய தகவல்களை கசிய செய்ததாக இவர் மீது சக அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து டிஜிபி விசாரணை மேற்கொண்டார்.

அதன் இறுதியில் ஐ ஜி விஜயன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாருக் சைய்பியை மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் இருந்து கேரளாவிற்கு ரகசியமாக அழைத்து வரும்போது ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி தொடர்பான விபரங்கள் கசிந்ததில் இவருக்கு முக்கிய பங்கு இருப்பது விசாரணையில் தெரிய வந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பதவி ஏற்றார். சில நாட்களுக்கு முன்பு தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவம் கேரள காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha