தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம் 

0
88

தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம்

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகையின் போது எவ்வளவு விற்பனையானது என்பது குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டு தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் கோடி கணக்கில் தொடர்ந்து உயர்ந்து கொண்டியிருக்கிறது.இதை அந்நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டியையை முன்னிட்டு, கேரளாவில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக அம்மாநில மதுபானக்கழகம் அறிவித்துள்ளது.

கேரளாவில் ஓணப்பண்டிகைக்கு முந்தைய நாளில் மட்டுமே வரலாறு காணாத வகையில் மது விற்பனை நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. நேற்று கேரளா முழுவதும் ஓணம் பண்டிகையையொட்டி அம்மாநில அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறைஅறிவித்திருந்தது.இதனைத்தொடர்ந்து அம்மாநில குடிமகன்கள் முந்தைய நாளே மதுவை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மட்டும் அம்மாநிலத்தில் 117 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. மாநில அளவில், கொல்லம் ஆசிரமம் விற்பனை நிலையத்தில் அதிக அளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொல்லம் ஆசிரம விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.6 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் திருவனந்தபுரத்தில் உள்ள பவர்ஹவுஸ் சாலை விற்பனை நிலையத்தில் சுமார் ரூ.1.2 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் உள்ள பாவ்கோ மதுபானக் கடைகளில் ஓணம் தினத்தில் மட்டும் ரூ.85 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இம்முறை அது ரூ.117 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.400 கோடிக்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு டப் கொடுக்கும் வகையில் கேரளா மதுபானக்கழகம் விற்பனையை அதிகரித்து வருகிறது.