கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பு? மேலும் 3 பேர் அதிரடி கைது!

0
81

கேரளா தங்க கடத்தல் வழக்கில் புதிதாக மூன்று பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

தங்க கடத்தல் விவகாரத்தின் பிண்ணனியில் ஐஎஸ் இயக்கம் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்களில் பலமுறை கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதில் பெருமளவு தங்கம் சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர். இதனால் இவ்வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், தங்கம் கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மலப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷபி, எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜலால், கொண்டோட்டி ஹஜ்மத் ஆகியோர் கொச்சியில் கைதாகியுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தங்க கடத்தல் வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். கைதான 3 பேரும் கேரள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதால் கேரளாவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Jayachandiran