திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்டகாலம்! முன்னாள் அமைச்சர் தெரிவித்த அதிரடி கருத்து!

0
54

திமுக ஆட்சியில் தமிழ்நாடு மறுபடியும் இருளில் முழுக ஆரம்பித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி குற்றம்சாட்டி இருக்கின்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பத்து வருடங்களுக்கு முன்னர் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்தது. அதிமுக அரசு பொறுப்பேற்றுகொண்ட பின்னர் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி போனது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்த சூழலில் தற்சமயம் தமிழகம் மறுபடியும் இருளில் மூழ்க ஆரம்பித்த இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதோடு அதிமுக ஆட்சிக்காலத்தில் நோய்த்தொற்று பரப்பில் கட்டுப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அதிமுக ஆட்சியில் இருந்த திமுக ஆட்சியில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்று எல்லோரும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்0 இதன் காரணமாக, பாதிப்பு கற்றுக்கொள் தான் இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு சில வாரங்களிலேயே நோய்த்தொற்று பரவல் அதிகமானதை பொதுமக்கள் யாரும் மறந்துவிட மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடுவதற்கு முயற்சி செய்யும் சசிகலாவின் முயற்சி எப்போதும் பலிக்காது. சசிகலா தினகரன் ஆகிய இரண்டு அணிகளும் ஒன்றுதான். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் சசிகலாவுடன் உரையாற்றினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி.