கூட்டணி கட்சியை கிழித்து தொங்கவிட்ட வைகோ? காங்கிரஸ் தான் குற்றவாளி! துரோகி!

0
70

கஷ்மீர் பிரச்சனைக்கு நேற்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதை அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் செய்தியாளரை சந்தித்து கூறியதாவது.,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்தது, காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும் டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளது.

திரு வைகோ காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உதவி உடன் தான் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைகோ பதிவு செய்தார்.

செய்தியாளர்களிடம் கூறியதாவது, காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாஜக அடித்த தவறைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை முழுமையாக தூக்கி எறிய வேண்டும். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி கண்ணீர் வடிக்கிறேன்.

மேலும் பேசிய அவர், ஷேக் அப்துல்லாவை அன்று கைது செய்து தமிழகத்தில் சிறையிலடைத்தது காங்கிரஸ். கார்கில் யுத்தத்தில் காஷ்மீரை பாதுகாக்க தமிழக இளைஞர்கள் பங்கெடுத்து ரத்தம் சிந்தினர். ஆனால் மத்திய அரசோ காஷ்மீருக்கான அனைத்து அதிகாரங்களையும் நீக்கிவிட்டது.

மேலும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கூட காங்கிரஸ் பெரிதாக எதிர்க்கவில்லை என்பதும், ரத்து செய்த விதத்தைத்தான் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கின்றது என்பதும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K