ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!!

0
106
#image_title

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!

வரும் ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் என்பதால் திமுக அரசு நூற்றாண்டு விழாவாக மிக பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

ஊர்கள் தோறும் திமுக கொடிக் கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, எங்கெங்கும் கலைஞர் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சிலை வைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குவது, திமுக குடும்ப மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம், பொதுக்கூட்டம், புதிதாக நூலகங்கள் தொடங்குவது என்று மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திமுக ஏற்பாடு செய்து வருகின்றது.

ஜூன் 3ம் தேதி சென்னை புளியந்தோப்பில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பேசவுள்ளார். இது போல அரசு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா விமர்சியாக கொண்டாடப்படவுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், பயனடைந்த மக்கள் அனைவரையும் இணைத்து விழாக்களை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு நிழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக ஜூன் 2ம் தேதி கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகின்றது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு  இலட்சினை(Logo) வெளியிடவுள்ளார். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்சியில் சிறப்புரை ஆற்ளவுள்ளார்.

இந்த தொடக்க நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, எம்.பிகள், எம்.எல்.ஏக்கள், அரரசு உயர் அதிகரிகள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.