பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

0
189
Karti Chidambaram
Karti Chidambaram

பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விவகாரம் தான் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு மற்றும் இரண்டாண்டு சிறை தண்டனை விவகாரம், இந்த விவகாரத்தில் பல எதிர்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ராகுல் விவகாரத்தில் ஒன்று சேர்ந்தன . இந்த நிலையில் ராகுல் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கின.

காங்கிரஸ் தலைவர் மலிகர்ஜுனகர்கே வரும் ஏப்ரல் மாதம் அணைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார். ராகுல் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் மற்றும் அணைத்து மாநில எம்எல்ஏக்கள் , கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, காங்கிரஸ் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கருப்பு சட்டை அணிந்து வந்தார். விவாதம் முடிந்து வெளியே வந்த போது ராகுல் காந்தி வந்ததை அறிந்த கார்த்திக் சிதம்பரம் அவருக்கு கொடுக்க சென்ற போது அவரை கண்டுகொள்ளாமல் ராகுல் சட்டென நாடாளுமன்றத்துக்கு உள்ளே சென்று விட்டார்.

ராகுலின் இந்த விவகாரம் தான் தற்போது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது, கார்த்திக்சிதம்பரம் பல நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தனது கருத்துக்களை கூறுவது தான் ராகுலின் கோபத்திற்கு காரணம் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. மேலும் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் மூலம் கார்த்திக்சிதம்பரம் பற்றிய தகவல்கள் ராகுலிடம் சென்றதால் தான் அவருக்கு இந்த நிலைமை என்றும், கடந்த மாதம் கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சந்தித்து செல்பி எடுத்து கொண்ட விவகாரம் சூடு பிடித்துள்ளது.

பரம்பரை காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த கார்த்திக்சிதம்பரம் சமிபகாலமாக பாஜகவின் சித்தாந்தங்களை கூறி வருவது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அதன் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை, என நேற்று ராகுல் நடவடிக்கையால் நொந்து போன கார்த்திக்சிதம்பரம் விரைவில் பாஜகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.