விக்ரம் ரூட்டில் ஆறு கெட்டப்களில் கார்த்தி…? சர்தார் படத்தின் டீசர் வெளியீடு!

0
96

விக்ரம் ரூட்டில் ஆறு கெட்டப்களில் கார்த்தி…? சர்தார் படத்தின் டீசர் வெளியீடு!

கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன. அடுத்து தீபாவளிக்கு அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசரைப் பார்க்கையில் பரபரப்பான ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருப்பது தெரியவருகிறது. ஒரு தேடப்படும் குற்றவாளியை தேடி செல்வதும், அவன் 6 விதவிதமான கெட்டப்களில் மாறுவேடத்தில் அலைவதும், என சமீபத்தில் வெளியான விக்ரம்மின் கோப்ரா திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல காட்சிகள் அமைந்துள்ளன. இந்த டீசர் தற்போது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கார்த்தி, ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் நடிக்கும் ‘சர்தார் திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். சர்தார் திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஒரே ஆண்டில் கார்த்தியின் மூன்று படங்கள் ரிலீஸ் ஆவது இதுவே முதல்முறை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கார்த்திக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.  சர்தார் படத்துக்குப் பிறகு கார்த்தியின் 25 ஆவது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளார்.