ஜூலையில் பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் அரசு

0
53

நாளுக்கு நாள் கொரோனா உச்சமடைந்து வருவதால் எந்த மாநிலமும் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியவில்லை.

அப்படி பள்ளிகள் துவங்கப்பட்டாலும் பெற்றோர்கள் அச்சமின்றி தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்களா என்ற ஐயம் அரசுக்கு உள்ளது.

இந்நிலையில் கர்நாடகா அரசு பள்ளி கல்வி துறை, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்தை கேட்டறிய அறிவுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கர்நாடகாவில் 4ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பள்ளிகளை ஜூலை 1ம் தேதியும், 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஜூலை 15-ம் தேதியும், மழலையர் பள்ளிகள் ஜூலை 20ம் தேதியும் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டத்தை தவிர்க்க ஷிஃப்ட் முறையில் வகுப்புகள் எடுப்பது அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் எடுப்பது போன்ற திட்டங்களை அரசு பரிசீலித்து வருகிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளி கூடங்களுக்கு அனுப்ப தயாராக இருக்கிறார்களா, இந்த வகுப்பு திட்டங்கள் அவர்களுக்கு சம்மதமா அப்படி இல்லையென்றால் அவர்கள் வைத்துள்ள திட்டம் போன்றவற்றை பெற்றோர்களை அழைத்து அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்து இணையதளம் மூலமாக அவர்கள் கருத்தை வரும் 10 முதல் 12ம் தேதிக்குள் இனையதளம் மூலமாக கர்நாடக அரசுக்கு அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 5ம் தேதி பள்ளிகளை திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் வரும் 8ம் தேதி முதல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K