தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்!

0
100
karnataka corona
karnataka corona

தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்!

நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவது அனைவருக்கும் தெரிந்தது. மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதும் நாளுக்கு நாள் அனைவரும் தெரிந்தது தான்.

ஆனால், கர்நாடகாவில் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஏன் யாரும் கவலைப்படவில்லை? அதிலும், பெங்களூர் நகரில் பாதிப்புகள் எவ்வளவு என்று தெரிந்தும் தெரியாதது போன்று ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் நடிக்கிறார்களா?  ஏன் பெங்களூர் பாதிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை? என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.

இதோ! நேற்று கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள்!

ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் 14,874 பேருக்கும், ஆர்டிபிசிஆர் மற்றும் இதற ஆய்வுகள் 1,61,740 பேருக்கும் என மொத்தமாக 1,76,614 பேருக்கு கொரோனா ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதில், 34,804 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

143 பேர் உயிரிழந்திருப்பதாக நலவாழ்வுத்துறை கூறியுள்ளது. தற்போது வரை, 2,62,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பெங்களூர் நகரில் மட்டும் நேற்று 20,733 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெங்களூர் நகரில் 6,53,656 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,80,542 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெங்களூரில் மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பெங்களூரு நகரில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,800 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை பார்க்கும் போது, நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் பெங்களூரு நகரம் இருப்பதை உணர முடிகிறது. ஆனால், அங்கு தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவோ, சிகிச்சை அளித்து உயிரிழப்பை தடுக்கவோ நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாக் தெரியவில்லை. மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும், ஊடங்களும், அரசியல் கட்சியினரும் யாரும் இதைப்பற்றி பேசாததால், மூடி மறைக்கப்படுகிறதா? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.