தேசிய அளவில் ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! உற்சாகத்தில் படக்குழுவினர்

0
119
Ruthra Thandavam - News4 Tamil Latest Tamil Cinema News
Ruthra Thandavam - News4 Tamil Latest Tamil Cinema News

தேசிய அளவில் ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! உற்சாகத்தில் படக்குழுவினர்

கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி ருத்ர தாண்டவம் திரைப்படத்தை எடுத்துள்ளார்.தமிழ் திரைத்துறையில் யாருமே எடுக்க தயங்கிய நாடக காதல் பிரச்சனையை இயக்குனர் மோகன் தைரியமாக திரௌபதி திரைப்படத்தில் காட்டியிருந்தார்.அந்த வகையில் ஏற்கனவே இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து தமிழகம் முழுவதும் அளவிற்கு வரவேற்பு கிடைத்தது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் மக்கள் கொடுத்த ஆதரவினால் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.இந்த படத்திற்கு பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா,பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் வரவுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.ட்ரெய்லர் வெளியாகி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்து வருகிறது.

திரௌபதி திரைப்படத்தில் நாடக காதலை தோலுரித்து காட்டியது போல,இந்த படத்தில் மதமாற்றம் குறித்த நிகழ்வுகளை குறித்தும்,இதை வைத்து செய்யப்படும் சாதி ஒழிப்பு பிரச்சாரம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்படும் PCR என்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்தும் இந்த படமானது பேசுகிறது.

இந்நிலையில் தமிழக அளவில் பலரும் இந்த படத்திற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.அதே போல மதமாற்றம் குறித்து முதன் முதலாக எடுக்கப்பட்ட படமென்பதால் தேசிய அளவில் பாஜகவின் முக்கிய தலைவரான கபில் மிஸ்ரா ருத்ர தாண்டவம் படத்திற்கு தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

மதமாற்றம் குறித்து தைரியமாக பேசும் திரைப்படத்தை இயக்குனர் மோகன் எடுத்துள்ளார்.தமிழ் திரையில் முதன் முறையாக இது போன்ற கதையுடன் வெளியாகும் படம் வெற்றி பெற இயக்குனருக்கு வாழ்த்துக்கள் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹச் ராஜா ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் தேசிய தலைவர் பாராட்டி பதிவு செய்துள்ளதையடுத்து படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
Ammasi Manickam