பிரபல நடிகருடன்  மீண்டும் ஜோடி சேரும் கண்ணழகி மீனா!அதிர்ச்சியில் இளம் நடிகைகள்!

தமிழ் சினிமாவில் 2000ம்  ஆண்டுகளில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் கண்ணழகி மீனா. தென்னிந்திய மொழியில் ராணியாக திகழ்ந்தவர் மீனா. ஏனெனில் இவர் கமல் ,ரஜினி, அஜித்,பார்த்திபன், கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

விஜயுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய மீனா அவருடன் இணைந்து நடிக்கவில்லை இன்றளவும் வருத்தம் அளிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.44 வயதை எட்டிய கண்ணழகிக்கு தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அனைத்து இளம்  நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மீனா தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்துக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

2013 ஆண்டு வெளியான திருஷ்யம் என்ற படத்தில் நடித்ததன் மூலம்   சிறப்பு பெற்றார். தற்போது மீண்டும் திருஷ்யம் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மோகன்லால் மற்றும் மீனா ஜோடி மலையாள சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைய உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.