நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதற்க்காகவே நீட் தேர்வு! திருவள்ளூரில் கொந்தளித்த கனிமொழி!

0
61

திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை குழு துணை தலைவருமான கனிமொழி நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில் ஒதுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்திருக்கிறார். அதேபோல அகரமேல் ஊராட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது உரையாற்றிய கனிமொழி எப்படிப்பட்ட காலகட்டத்திலும் பொது மக்களுக்கு நிதி தேவைப்பட்டால் அந்த சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்தியில் கூட்டாட்சி என்று அறிஞர் அண்ணா தெரிவித்தார் ஆனால் இன்று இருக்கும் மத்திய அரசு அதிகாரங்களை எல்லாம் குவித்து வைத்துக்கொண்டு நாங்களே அனைத்து உரிமைகளையும் வைத்திருப்போம் என நினைக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும் இங்கே சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றும் போது அதனை கேட்டால் பேசாமல் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கலாம் என்று தோன்றக்கூடிய அளவிற்கு இருக்கிறது. மத்திய அரசாங்கம் நோய்த் தொற்றை காரணம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துவிட்டது. இந்த சமயத்தில் நம்முடைய தலைவர் அவர்கள் பொது மக்களின் அடிப்படைத் தேவையை புரிந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூன்று கோடி ரூபாயை பயன்படுத்தும் உரிமையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என கூறியிருக்கிறார் கனிமொழி.

நிதியே இல்லை என சொல்லக்கூடிய நிலையில், மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும், இருந்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகத்தில் இருப்பதுதான் மக்களுக்கும் சரி அரசியல்வாதிகளுக்கும் சரி, ஊடகத்தில் நடக்கும் சரி ,மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என உரையாற்றியிருக்கிறார்.

நம்முடைய வாரிசுகள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டது. இருந்தாலும் நீட் தேர்வை திணித்து நம்முடைய வாரிசுகளுக்கான அடிப்படை தேவைக்காக கொண்டுவந்த மருத்துவக் கல்லூரிகளில் நம்முடைய குழந்தைகள் படிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். இதை எல்லாம் உடைத்தெறிந்து நம்முடைய பிள்ளைகள் மறுபடியும் மருத்துவ படிப்புகளை தொடர்வதற்காக தான் நீட் விலக்கு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் முதலமைச்சர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கனிமொழி.