சூரப்பாவுக்கு ஆதரவளித்த பிரபலம்!

0
63

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்க்கு எதிரான இருநூறு கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது ஆனால் தான் எந்த ஒரு முறை கேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை என்றும் சூரப்பா விளக்கம் அளித்திருக்கிறார்.

சூரப்பாவிற்கு எதிரான விசாரணையை கலையரசன் ஆணையம் ஆரம்பித்து விட்ட இந்த நிலையில் சூரப்பா நேர்மையானவர் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றார்.

தனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்ற கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூரப்பா என்னுடைய நேர்மை அர்ப்பணிப்பு கல்வித்துறைக்கான என்னுடைய சேவையை கருத்தில் வைத்து ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக ஆதரவு என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு தான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரை இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார் சூரப்பா ஆயினும் சூரப்பாவிற்கு கமலஹாசன் ஆதரவு தெரிவித்தது தொடர்பான கேள்விகளும் எழுப்பப்பட்டன.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி அன்பழகன் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசுகின்றார் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கப் போகின்றோம் என்ற காரணத்திற்காகவே எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றார் என்று சாடினார் கே.பி அன்பழகன்.

அதேபோல காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றார் அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் சூரப்பா நியமனத்தின் போது எதற்காக நியமிக்கிறார்கள் என்று கேட்டவர் கமல்ஹாசன் இப்போது ஆதரவளிப்பது எதற்காக என புரியவில்லை சூரப்பாவின் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாக யாரும் புகார் எழுப்பவில்லை அரசியல் காரணமாக ஆதரித்திருக்கிறாரா அல்லது நேர்மையான நிலை என்ற அடிப்படையில் ஆதரவு கொடுத்து இருக்கின்றாரா என்றே தெரியவில்லை என்று சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.