நான் ஆன்மீகத்திற்கு எதிரானவன் இல்லை! கமல்ஹாசன் திடீர் பல்டி!

0
70

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தன்னுடைய முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையில் நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஆரம்பித்தார் .இந்த நிலையில், மூன்றாவது கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சியில் ஆரம்பித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போது பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் திருமயத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய கமல்ஹாசன், திராவிடம் என்பது இரு கட்சிகளுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அது எல்லோருக்கும் உரியது. மொகஞ்சதாரா மற்றும் ஹராப்பா காலத்தில் இருந்தே திராவிடம் வாழ்கிறது.

ஆன்மீகத்திற்கும், எனக்கும் எந்தவிதமான விரோதமும் இல்லை என்னை யாரும் ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தம் செய்ய இயலாது. அதேபோல பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்பந்தம் செய்ய இயலாது என்று தெரிவித்தார்.

ரஜினியின் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ரஜினியின் முடிவானது பாஜகவிற்கு ஏமாற்றமா? என்ற கேள்விக்கு என்னால் பதில் தெரிவிக்க இயலாது. சென்னைக்கு போனதும் ரஜினியை சந்தித்து பேச இருக்கிறேன். ரஜினி நலம் விரும்பிகளில் நானும் ஒருவன் நண்பர் என்ற முறையில், சட்டசபைத் தேர்தலில் ஆதரவு கொடுக்குமாறு ரஜினியிடம் கேட்பேன் என்று தெரிவித்தார்.

முன்னரே சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஊடகங்கள் மூலமாக ரஜினியிடம் கமல்ஹாசன் ஆதரவு கேட்டு இருந்தார். ஆனால் யாருக்கும் தன்னுடைய ஆதரவு கிடையாது. என்று அறிக்கை வெளியிட்டு அதனை நிராகரித்தார் ரஜினிகாந்த். சட்டசபை தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில், ரஜினிகாந்துடன் ஈகோ பார்க்காமல் ஒன்றிணைந்து பணியாற்ற தயார் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். ரஜினி இப்பொழுது அரசியல் கட்சி ஆரம்பிக்காத நிலையிலே, கமலஹாசன் அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை கொடுப்பாரா? என்று பொருத்திருந்து பார்க்கலாம்.