தமிழகத்தின் முக்கிய பிரபலத்தை சந்தித்த கமலஹாசன்! அரசியலில் திடீர் திருப்பம்!

0
73

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் இருந்தாலும் இவ்வாறு ரஜினி தெரிவித்ததால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வளவு நாள் தயக்கம் காட்டிய நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அரசியல் ஒரு சாக்கடை எனக்கும் அரசியல் தெரியும் ஆனாலும் அதில் நான் இறங்க மாட்டேன் அது எனக்கு ஒத்து வராது என் ஒதுங்கியே இருந்த கமல் அரசியல் சாக்கடை என்று தெரிவித்தால் போதுமா இறங்கி சுத்தப்படுத்த வேண்டாமா என்று கேட்டு திடீரென அரசியலில் இறங்கினார்.

சினிமாவிலும் ரஜினிகாந்த் பரபரப்பாக இருக்கின்றாரே அதேபோல அரசியலிலும் பரபரப்பாக இருக்கிறார் என்று ஒரு பொறாமை தான் கமல் கட்சி தொடங்கியனார் என விமர்சனங்கள் எழுந்தன.

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே கமல் சென்று பார்த்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவர் கொள்கை ஒத்துப்போனால் கூட்டணி அமையும் என்று கமலும் சீமானும் அப்போதே தெரிவித்து இருந்தார்கள்.

ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பின் இப்பொழுது இவர்களுடைய கொள்கை ஒத்துப் போயிருக்கின்றது வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணி அமைகின்றன இந்த இரு கட்சிகளுமே கணிசமான வாக்குகளை பெற்று வருகின்றன அந்த வகையில் இரு கட்சிகளும் இணைந்தால் கூடுதல் பலம் என்று ஒன்றிலேயே முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதோடு சிறிய கட்சிகளையும் தங்களுடைய கூட்டணியில் இணைப்பதற்கு நான் முயற்சிக்கின்றேன் என்று சீமான் தெரிவித்திருக்கின்றார் வாக்கு வங்கி அதிகம் இருக்கின்ற ஒரு பெரிய கட்சி தங்களுடைய கூட்டணியில் சேர்த்து விடுகிறேன் என்று சீமான் அவர்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம் கமல்.

சினிமாவில் தான் கமல் சீனியர் அரசியலில் நான் தான் சீனியர் என தெரிவித்துவரும் சீமானிடம் சட்டசபையில் நம்முடைய பங்கு நிச்சயமாக இருக்க வேண்டும் அதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்ற தீவிர ஆலோசனையில் கமல் இருப்பதாக சொல்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் வட்டாரத்தினர் மக்கள் நீதி மையத்தில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.