திருமாவளவனை சூசகமாக கூட்டணிக்கு அழைத்த முக்கிய கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
130

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நேற்றைய தினம் முடிந்து இருக்கிறது. இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த கட்சியின் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடியே திருமாவளவன் சமாதானப்படுத்தி இருக்கின்றார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் கொடுக்கப்பட்டது தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருக்கிறார்.

திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் கொடுத்ததுதான் சமூகநீதியா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். சென்னை மடிப்பாக்கம் கூட்டுரோடு என்ற பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக ஒரு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்திருக்கின்றது. இதில் உரையாற்றிய கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
சமூகநீதியை குத்தகைக்கு எடுத்தவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி பேசி வருகிறார்கள். சமூகநீதி என்பதே உங்களுடைய உயர்வுக்காக நாங்கள் போட்ட பிச்சை தான் என திமுகவின் ஆர் எஸ் பாரதி தெரிவித்ததை சுட்டிக்காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்

சமூக நீதி என்பது பிச்சை கிடையாது, அது அனைவருக்குமான உரிமை அப்படி சமூகநீதியை பற்றி பேசிய என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். என்னுடைய தம்பி என்னுடன் இணைய வேண்டும் அதனை அடுத்த தேர்தலில் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்இது கமல்ஹாசன் திருமாவளவனுக்கு விடுத்த அழைப்பாகவே பார்க்கப்படுகின்றது. ஆரம்பத்திலிருந்தே திமுக கமல்ஹாசனை தங்கள் கூட்டணியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொண்டன திமுக முயற்சிகள் எதுவும் கமல்ஹாசனிடம் எடுபடவில்லை.

திமுக இயங்கி கொண்டிருக்கும் அதே கடவுள் மறுப்புக் கொள்கையை கமலஹாசன் பின்பற்றுவதால் கொள்கை ரீதியாக கமல்ஹாசனை தங்களுடைய கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று திமுக கணக்கு போட்டது. ஆனால் திமுகவின் கணக்கு கமல்ஹாசனிடம் பலிக்கவில்லை.இந்த நிலையில், அதிமுக திமுக என்ற இரண்டு அணிகளையும் தவிர்த்து கமலஹாசன் தலைமையில் மூன்றாவது அணி உருவானது. அந்த அணியில் ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கின்றன. அந்த அணியில் மேலும் ஒரு சில கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அந்த விததில் தற்சமயம் திமுக சார்பாக திருமாவளவனுக்கு ஆறு தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனை விமர்சனம் செய்யும் வகையில் கமலஹாசன் பேசியிருப்பது திருமாவளவனை தங்களுடைய கூட்டணி கொடுப்பதற்காக தான் என்று சொல்கிறார்கள்.