அதையெல்லாம் வெளியே சொல்ல இயலாது! கமல் சூட்சமமான பதில்!

0
70

தமிழக சட்டசபை தேர்தல் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அதிமுக, மற்றும் திமுக, போன்ற கட்சிகள் தேர்தல் பணி குழு, தேர்தல் அறிக்கை குழு, என அமைத்து தேர்தல் பணிகளை அந்த கட்சிகள் வேகமெடுக்க செய்திருக்கின்றன. சட்டசபைத் தேர்தலில் ரஜினிகாந்தும் களமிறங்க இருக்கின்ற நிலையிலே, எப்போதும் இல்லாத அளவில் தமிழக தேர்தல் களம் கடுமையான போட்டியை சந்திக்கும் நிலையில் இருந்து வருகின்றது.

இப்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில், தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். கமலஹாசன் செல்லுமிடமெல்லாம் கூட்டம் கூடி வரும் காரணத்தால், அடுத்த முதல்வர் தான் என கற்பனை கோட்டை கட்டி வருகின்றார். உலக நாயகன் கமல்ஹாசனை பார்க்க வந்த கூட்டம் தானே ஒழிய அந்தக் கூட்டம் எப்போதும் மக்கள் நீதி மையத்தின் ஓட்டுக்கள் ஆக மாற இயலாது என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்றைய தினம் திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி, மாவட்டங்களில் கமலஹாசன் பிரச்சாரம் செய்து வருகின்றார். அதோடு ஆங்காங்கே மக்களுடன் கலந்துரையாடலும் நடத்தி வருகின்றார். இப்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பிரச்சாரம் செய்து வருகின்ற கமல்ஹாசன், தன்னுடைய கட்சி கொள்கை தொடர்பாக தெரிவித்து இருக்கின்ற ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது .அதாவது மக்கள் நீதி மையம் கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு, என்னுடைய கட்சியின் கொள்கைகள் பற்றி வெளியே தெரிந்தால், அடுத்தவர்கள் அதை காப்பி அடித்து விடுவார்கள் என்ற காரணத்தால், வெளியே தெரிவிக்கவில்லை என ஏதோ பள்ளி மாணவன் போல பதில் அளித்திருக்கிறார் கமல்ஹாசன்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் கொள்கைகளை எடுத்து தெரிவித்து மக்களிடம் தலைவர்களும், வேட்பாளர்களும், தங்களுடைய பிரச்சாரத்தை செய்வதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனாலும் இவ்வாறு வெளியே சொல்ல இயலாத அளவிற்கு, அப்படி என்னதான் கொள்கைகளை கமல்ஹாசன் வைத்திருப்பார் எனவும், பொறுப்பான கட்சி தலைவராக கொள்கைகளை கூட தெரிவிக்க இயலாதா என்றும், கமல்ஹாசனின் பதிலை கேட்ட மக்கள் நீதி மையத்தின் தொண்டர்களும் மக்களும் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள்.