விமர்சனங்களுக்கு பதிலளித்த கமல்!

0
58

தன்னை சங்கி என்று விமர்சனம் செய்தவர்களுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா அவர்களுக்கு எதிரான பேராசிரியர் பணி நியமனத்தில் 200 கோடி ஊழல், தனது மகளுக்கு பணி வழங்கிய விவகாரம், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் செய்த 80 கோடி ஊழல் மற்றும் அரியர் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தவறுதலான தகவல்களை கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைக் குறித்து விசாரிப்பதற்கு தமிழக அரசு நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியான நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரிக்க முடிவு செய்தது.

மேலும் இந்த விசாரணை சரியாக நடைபெறவும் மற்றும் ஆவணங்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்காகவும் சூரப்பா வை பணியிடை நீக்கம் செய்தாக வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதனைத் தொடர்ந்து சூரப்பா வுக்கு எதிராக கலையரசன் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. இதில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆன அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிராகவே நின்றது. இந்நிலையில் சூரப்பா நேர்மையானவர் என்று இவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன். இதுகுறித்து கமலஹாசன் தெரிவிப்பது, ஊழலுக்கும் நேர்மைக்கும் நடக்கும் இந்தப் போரில் நான் நேர்மையின் பக்கமே இருக்கிறேன். இதில் நேர்மையாளர்கள் வாய்மூடி இல்லாமல் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். மேலும் ஒரு நம்பி நாராயணன் உருவாகி விடக்கூடாது என்று கூறியிருந்தார்.

இதனால் கமலஹாசன் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக பேசியதை கமல் பாஜகவின் பி டீம் ஆக மாறிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில்தான் கமல்ஹாசன் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

  • அதில், ‘வாழ்நாள் முழுக்க தமிழகத்தை சுரண்டி தின்பவர்கள் ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரம்பியவர்கள் அல்லவா?’ என்று திமுக செய்த 2ஜி வழக்குகளையும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கையும் மறைமுகமாக குறிப்பிட்டு சாடியுள்ளார்.

மேலும் அவர்,”தன் வாழ்க்கையை தன் செய்தி என்று வாழ்ந்து காட்டிய காந்திக்கு தான் நான் பி டீம். 6 வயது முதலே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உரைக்கும் படி சொல்கிறேன்” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார் கமலஹாசன்.