ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்!

0
76

ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்!

ஊரடங்கு குறித்து மத்திய அரசு சரியான் முறையில் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு நடிகர் கமல் கடிதம் எழுதியுள்ளார்.

கமலின் கடித்தத்தில் கூறியிருப்பதாவது;
கடந்த மார்ச் 23 ஆம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன் அடுத்த நாளே ஊரடங்கு உத்தரவு திடீரென்று போடப்பட்டது. பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் தரப்படவில்லையோ அதேபோல் இந்த முறையும் கால அவகாசம் மக்களுக்கு தரப்படவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பொது மக்கள் எந்த அளவிற்கு சிரமம் கொண்டார்களோ அதேபோல், இந்த ஊரடங்கு உத்தரவு சமயத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாடியில் விளக்கேற்றும் போது எத்தனையோ ஏழைகள் உணவுக்காக எண்ணெய் இல்லாமல் தவித்து வருகின்றனர். வீட்டு வேயாட்கள், தினக்கூலி ஆட்கள், அனைத்து டிரைவர்கள், புலம்பெயர்ந்த மக்கள் பலர் தங்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு போராடி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஏழைமக்களை பசி மற்றும் வறுமையால் வாட வழிவகை செய்கிறோம்.

கொரோனாவை தடுக்க நான்கு மாதங்கள் நேரம் இருந்தும் நான்கு மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏழை மக்களை புறக்கணிக்கும் அரசு மக்களால் கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. உங்களின் தொலைநோக்கு பார்வை சரியாக இல்லாமல் தவறிவிட்டது. இதனால் என்னை தேசத்துரோகி என்று யாராவது சொன்னாலும் சொல்லட்டும்’ என்று கமல் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

author avatar
Jayachandiran