குள்ளநரித்தனம்! தமிழக அரசை விமர்சித்த கமல்ஹாசன்!

0
67

நியாயவிலை கடைகளில் கொடுப்பது மாமனார் இல்லத்து பொங்கல் சீதனம் இல்லை என கமல்ஹாசன் விமர்சனம் செய்திருக்கின்றார்.

தமிழ்நாட்டிலே நியாய விலை கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 2,500 ரூபாய் ரொக்கம், அரிசி, கரும்பு ,முந்திரி, திராட்சை, போன்றவை வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை வாக்காக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும், அதன் காரணமாகவே நியாய விலை கடை வாசல்களில் அதிமுகவின் கட்சியின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாக திமுக குற்றம்சாட்டி நீதிமன்றம் வரை போனது.

நீதிமன்றம் இதற்க்கு தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்திருந்தது. நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நியாயவிலை கடைகளில் இரட்டை இலை சின்னம் அச்சடித்து ஓட்டு கேட்கும் விதமாக துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்க பட்டதாக காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நியாயவிலை கடைகளில் கொடுப்பது மாமனார் இல்லத்து பொங்கல் சீதனம் கிடையாது. தங்கள் சொந்த பணத்தை கொடுப்பது போல ஆளும்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமாக இருக்கிறது0 உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட நியாய விலை கடை பிரச்சாரம் முடிவுக்கு வராமல் இருப்பது குள்ளநரித்தனம் உண்மையான நரிகள் மன்னிக்க என்று குறிப்பிட்டிருக்கிறார்.