பாபநாசம் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

0
89

கமலஹாசன் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு 1 மகளும் 1 மகனும் உள்ளனர்.கொரோனா நோய் தொற்றுக்காரணமாக பள்ளிகள் திறக்க படாத நிலையில் ஆன்லைன் வகுப்பு பயில்வதற்கு தனது மகளுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணும் அவளது மகனும் வேலைக்குச் சென்று விட அந்த சிறுமி மட்டும் தனியாக  வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த சிறுமி தனது ஆண்ட்ராய்டு மொபைலில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தனக்கென்று 1 அக்கௌண்டை ஓபன் செய்து தனது மற்றும் அவரது குடும்ப புகைப்  படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.அந்நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் தாலுக்கா விழுப்பனூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் அண்ணன் போல் பழகி பிறகு காதலிக்க ஆரமித்துள்ளனர்.நான் உன்னை ஆடை இல்லாமல் பார்க்க வேண்டும் என தமிழ்செல்வன் அந்த சிறுமியிடம் கேட்டுள்ளான்.முதலில் மறுப்பு தெரிவித்த அந்த சிறுமி,பிறகு வீடியோக்களில்  தன்னை நிர்வாணமாக காட்டியிருக்கிறாள்.தமிழ்செல்வன் அதை வீடியோ பதிவு செய்து வைத்துக் கொண்டு சிறுமியை மிரட்டியுள்ளான்.நீ என்னிடம் பழகியது போல தான் மற்ற ஆண்களிடமும் பழகுவாய் என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளான்.பிறகு அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து இருக்கிறான் .

இதற்கிடையே மாணவியின் அம்மா மொபைலிற்கு வாட்ஸ் ஆப் மூலம் மாணவியைப் பற்றி அசிங்கமான வார்த்தைகளில் திட்டியும் நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியும் வைத்துள்ளான்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது அம்மா மாணவியிடம் சென்று விசாரித்துள்ளார்.நடந்த அனைத்தையும் மாணவி கூறியுள்ளார்.பிறகு தமிழ்செல்வனிடம் சிறுமியின் தாய் விட்டு விடுமாறு கேட்டுள்ளார் .

அதை சிறிதும் பொருட்படுத்தாத தமிழ்செல்வன் கமலஹாசனின் பாபநாசம் பட பாணியில் சிறுமியின் தாயையும் நிர்வாணமாக வீடியோ கால் செய்யுமாறு மிரட்டயுள்ளான்.அதிர்ந்து போன அந்த தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.நான்கு நாட்கள் கடந்தும் புகாரை எடுத்துக் கொள்ளாததால் நாமக்கல் மாவட்டம் கண்காணிப்பாளர் சக்தி கணேசை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.காவல் அதிகாரி வழக்கை தீர விசாரித்து அன்று இரவே தமிழ்செல்வனை கைது செய்து விசாரித்துள்ளனர்.தமிழ்செல்வன் காவல் அதிகாரியிடமே “உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” என்று சவலாடக பேசியுள்ளான்.பிறகு காவல் அதிகாரி விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து, இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அனைத்து மகளிர் காவல் அதிகாரி விசாரிப்பு என்ற பெயரில் அந்த சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டித்  தீர்த்துள்ளனர்.மீண்டும் கண்காணிப்பாளர் சக்தி கணேசிடம் நடந்ததைக் கூறி இந்த வழக்கே வேண்டாம் என்று அந்த குடும்பம் கேட்டுள்ளது.இதைக் கேட்ட கண்காணிப்பாளர் மிகுந்த கோவம் அடைந்து அனைத்து மகளிர் காவல் அதிகாரி இந்திராவை கண்டித்துள்ளார்.பிறகு 30 நிமிடத்தில் தமிழ்செல்வன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த சம்பவத்தின் மூலம் பெற்றோர்கள் குழந்தைளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுக்கும் முன் அதில் இருக்கும் ஆபத்தையும் சொல்லி கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.