கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு! இணையவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சிபிசிஐடி!

0
129

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து ஊடகங்கள் மற்றும் youtube சேனல்கள் வெளியிட்டவை புலன் விசாரணை நடத்தினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

இது குறித்து சிபிசிஐடி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்தான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையை சார்ந்தவர்கள் மேற்படி வழக்கில் புலன்விசாரணை செய்த வருகிறார்கள். அதோடு அந்த மாணவி உயிரிழப்பு தொடர்பாக அனைத்து கோணங்களிலும் புலன்விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக ஊடகங்கள் பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் வெளியிட்டவை இது குறித்து அவர்களுடைய சொந்த கருத்துக்களையும், அறிக்கைகளையும், காணொளி காட்சிகள் மூலமாக வெளியிட்டும், அதோடு இதுகுறித்து இணையான புலன் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் புலன் விசாரணையை பாதிக்கும் விதத்தில் இருக்கிறது.

ஆகவே சிபிசிஐடியின் புலன் விசாரணையின் முன்னேற்றத்தை இது பாதிக்கும் விதத்தில் எவ்விதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதோடு இதுகுறித்து நீதியை நிலை நாட்டுவதற்கு நியாயமான புலன் விசாரணை செய்யவும் எல்லோரும் குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ எப்படிப்பட்ட இணைய வழியிலான புலன் விசாரணையில் இறங்கினால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதோடு அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் youtube சேனல்கள் வெளியிட்டவை முடக்கப்படுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம்.

இந்த வழக்கு தொடர்பாக யாருக்காவது சரியான தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் உயரதிகாரியின் தொலைபேசி எண்ணான 9003848126 என்ற எண்ணுக்கு நேரடியாக தெரிவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.