கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு! எதிர்ப்பை தெரிவிக்கும் தமிழக அரசு!

0
81

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு! எதிர்ப்பை தெரிவிக்கும் தமிழக அரசு!

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மாணவி ஸ்ரீமதி இறந்தது தற்பொழுது வரை மர்மமாகவே தான் உள்ளது. இரண்டு முறை மாணவியின் உடலை பிரேத பரிசோதனை நடத்தியும் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இவரது பெற்றோர்கள் பள்ளியை குற்றம் சாட்டி வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீமதி விழுந்து அவரை தூக்கி செல்லும் வீடியோவானது வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கலவரத்தால் பள்ளியில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை வரும் 10 நாட்களுக்குள் பரிசீலித்து அதற்கான முடிவுகளை அம் மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் இந்த மனுவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் பள்ளியை சீர் செய்யக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி இப்பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் பலர் வேறு பள்ளியில் இணைந்து படிப்பை தொடர்ந்து வருவதாகவும், மீதமுள்ள மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை பயின்று வருவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பானது மிகவும் பாதிப்படைகிறது. அதனால் பள்ளியை திறக்க அனுமதி அளிக்குமாறு அம்மனுவில் பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசோ பள்ளி தாளாளரின் மகன் மீது குற்றாசாட்டு உள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.