கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு!

0
88

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் போரட்டம்! மாணவியின் மர்ம கொலை வழக்கு!இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து உயிரிழந்ததை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 

மேலும் விசாரணையில் மாணவி பள்ளி சம்பந்தப்பட்ட காரணத்தினால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தனியுரிமை காரணங்களால் தற்கொலை செய்து கொண்டாரா?என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

 

மேலும் இந்த சம்பவம்மானது தற்கொலை இல்லை கொலை என்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் இந்த மனைவியின் மரணம் குறித்து உண்மைகள் எதுவும் வெளிவராத காரணத்தால் சின்னசேலம் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மாணவர்கள் மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளி எதிரில் மாணவர் அமைப்பு சார்பாக போராட்டம் நடந்து வருகிறது.

 

மேலும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு நமது தங்கை ஸ்ரீமதியின் கொலை விசாரணை நடத்தவும் அப்பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமார் அவர் நேரில் வந்து மக்களிடமும் ஸ்ரீமதியின் தாயிடமும் அன்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமதியின் மரணத்திற்கான உண்மை காரணம் தெரிய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் இறந்த மாணவியின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவலில் மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் மாணவி உடலில் ரத்த கரைகள் இருந்தன எனவும் பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் மாணவியின் இதயம் உள்ளிட்ட ஐந்து உறுப்புகள் தடவியல் துறை ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இந்த மரணம் தொடர்பாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வன்முறையை தடுக்க சென்ற விழுப்புரம் நகர டிஐஜி பாண்டியன் மற்றும் வஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உட்பட பல போலீசார் காயம் அடைந்துள்ளனர். மேலும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள புகுந்து போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்துகளை தீ வைத்து கொளுத்தி வருகின்றார்கள். போராட்டம் ஆனது தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த போராட்டம் ஆனது அந்த மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K