ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!!

0
202

ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!!

ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தில் காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பல்பாக்கி கிராமத்தில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஓம் காளியம்மன், மகா மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளது. இந்த திருக்கோவில்களின் திருவிழா ஒவ்வொரு வருடமும் தைமாதத்தில் நடைபெறும். திருவிழாவை தொடர்ந்து 15 நாட்களுக்கு முன்னதாகவே பூச்சாட்டுதல் செய்து கம்பம் நடப்பட்டது.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக, மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு பக்தர்கள் பூ கரகம்,அக்னி கரகம், முளைப்பாலி, சக்திகரகம் எடுத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்தும், எருமை கிடா பலியிட்டும் காளியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அலகு குத்தி, அக்னி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முனியப்பனுக்கு பக்தர்கள் வேண்டுதல் வைத்து ஆயிரக்கணக்கான கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து தேர் திருவிழா நடைபெற்றது. இதில், ஒரு நாள் மாரியம்மன் தேறும், அடுத்த நாள் காளியம்மன் தேறும் என தனித்தனியாக இரண்டு தேர்கள் கிராமத்தை சுற்றி வலம் வந்தது.

இந்த விழாவில் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.இதையடுத்து சத்தாபரணம், வாணவேடிக்கை, மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெற உள்ளது.மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா இன்னும் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.