கனவில் வந்து சொன்ன காளியம்மன்! 101 குடம் தண்ணீர் கொண்டு பூஜை செய்த மக்கள்!

0
141

அரூர் அருகே கொரோனாவை தடுக்க காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டுள்ளனர்.

கொரோனா என்ற பெரும் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரானாவின் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ‌உள்ள அரூர் அடுத்த அக்ரஹாரம் உட்பட்ட நெருப்பாண்டகுப்பத்தில், கொரோனாவை தடுக்க வேண்டி காளியம்மன், மாரியம்மனுக்கு, 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது: இதற்கு முன்னர் வந்த காலரா, மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்றவற்றிற்கு கூட எங்கள் காளியம்மன் மற்றும் மாரியம்மனை வேண்டி நாங்கள் வழிபட்டு வந்த பொழுது எங்கள் பகுதியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

அதேபோல் கடந்த ஆண்டு வந்த கொரோனா வின் முதல் அலையில் கூட இவ்வாறு வழிபட்ட பொழுது எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறினர்.

 

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் கனவில் காளியம்மன் வந்து தனது சன்னிதிக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி வழிபடுமாறு கூறியுள்ளார். அதனால் பெண்கள் அனைவரும் சேர்ந்து காளியம்மன் மாரியம்மனுக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி வழிபட்டுள்ளனர். இதன் மூலம் அந்த கிராமத்திற்கு கொரோனா பரவாது என்று அவர்கள் கூறினர்.

இதன் மூலம் கொரோனா சற்று குறைத்தால் நல்லது தான்.

author avatar
Kowsalya