அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

0
143
Kalaimamani awards given to them in the AIADMK regime will be taken away! Action taken by the Tamil Nadu government!
Kalaimamani awards given to them in the AIADMK regime will be taken away! Action taken by the Tamil Nadu government!

அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

அதிமுக ஆட்சியில் திரையுலக சேர்ந்தவர்கள் என பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் கார்த்திக், சசிகுமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை நளினி என பலருக்கு முதல்வர் கையில் விருது வழங்கப்பட்டது. இது குறித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நான் நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். எனது கலையை பாராட்டி 2017 ஆம் ஆண்டு தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. குறிப்பாக கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள் எந்த வயதில் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இந்த கலைமாமணி விருதுக்கு மட்டும் வயது வரம்பு எதுவும் கிடையாது.

அந்த வரிசையில் 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக, கலைமாமணி விருது வழங்கியது. அதில் தகுதியற்ற பலருக்கும் இந்த விருதை வழங்கி உள்ளது. விருது வழங்க வேண்டும் என்ற நோக்கில் அவசர நோக்கத்தில் எதுவும் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு விருதை வழங்கி உள்ளனர். எனவே தகுதியற்றவர்களிடமிருந்து கலைமாமணி விருதை திரும்பி வாங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இவர் அளித்த மனுவிற்கு தமிழக அரசின் நாடக மன்ற உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் பதிலளித்தார். அதில், அதிமுக ஆட்சி நடைபெற்று இருந்த நிலையில் அவசர நோக்கில் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட விருதில் பலரும் இதற்கு தகுதியற்றவர்களாக உள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து விருதுகள் திரும்பி பெறப்படும் என்று கூறியுள்ளார். மனு அளித்த உடனே அதற்கு உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசை நீதிமன்றம் பாராட்டி உள்ளது. மேற்கொண்டு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது.