ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

0
65

இவ்வுலகில் பல கோடி நபர்கள் வாழ்ந்துவருகிறார்கள் அப்படி வாழ்ந்து வரக்கூடிய நபர்களுக்கு சர்ப்ப கால, சர்ப்ப தோஷ பாதிப்பு ஏற்படுகிறது. இதில் பலர் சர்ப்பத்தை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு எப்படி சர்ப்ப தோஷம் உண்டானது? என்பதை சிந்திக்க வேண்டும் இவைகள்தான் கர்மவினைகள் என்று சொல்லப்படுகின்றன. ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால் கீழ்வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப கால சர்ப்ப தோஷம் உண்டாகிறது.

எந்தவித காரணமுமின்றி ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது, நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளை பிரித்து வைப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது.

திருடுவது. கொடுத்த வாகை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய் வதந்தியை பரப்புவது, உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது, பசுக்களை மற்றும் விலங்குகளை வதம் செய்வது, இயற்கையை மாசுபடுத்துவது நோய் பரப்புவது வதந்தியை பரப்புவது போன்ற காரணங்களால் தான் சர்ப்ப காலசர்ப்ப தோஷம் உண்டாகிறது என சொல்லப்படுகிறது.

ராகு மற்றும் கேது என்ற சாயாக் கிரகங்கள் முன்னோர்கள் வழிவழியாக தொடர்ந்து செய்துவரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள்.ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் சுட்டிக்காட்டும் கிரகங்களாக இருந்து வருகின்றன.

இதனை சற்று அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் மனிதர்களின் மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் ராகு கேதுக்களின் கலவைகள் என்று சொல்லப்படுகிறது. குரோமோசோம்கள் என்பதை ஒருவரின் உயரம், முடி, கண்விழி, உள்ளிட்டவற்றின் அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம் உடல் பருமன். பரம்பரை வியாதி உள்ளிட்ட அனைத்து குணங்களும் பதிவாகியிருக்கும்.

23 குரோமோசோம்கள் தந்தை வழியை குறிப்பதாகும் மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழியை குறிப்பதாகும் முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு-கேதுக்கள் என்ற பாம்புகளின் பிடியில் சிக்கி 33 வருடங்கள் அனுபவித்து பல அனுபவங்கள் பெற்று தோஷநிவர்த்தி பெறுவதாகும்