“ஆட்டநாயகன் விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்…” கே எல் ராகுல் ஓபன் டாக்

0
150

“ஆட்டநாயகன் விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்…” கே எல் ராகுல் ஓபன் டாக்

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது கே எல் ராகுலுக்கு வழங்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா கே எல் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட்கள் இழந்து 237 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லரின் அபாரமான சதத்தால் 221 ரன்கள் சேர்த்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் 29 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த கே எல் ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் 22 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து அவரை விட சிறப்பாக விளையாடி இருந்தார் சூர்யகுமார் யாதவ்.

இதுபற்றி பேசிய ராகுல் “நிச்சயமாக, நான் இதைப் பெறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சூர்யா, பேட்டிங் செய்த விதம், போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார், மேலும் அவர்தான் ஆட்டத்தை மாற்றினார் என்று நான் நினைக்கிறேன். ஓப்பனிங் பேட்டர்களாகிய நாங்கள் எப்பொழுதும் எங்கள் பணி கடினமானது என்று நினைக்கிறோம், ஆனால் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சில இன்னிங்ஸ்களை பேட் செய்ததால், அதுவும் கடினம் என்பதை உணர்ந்தேன், நான் சொன்னது போல் சூர்யா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் “விராட் பேட்டிங் செய்த விதம். மேலும் தினேஷ் போன்ற ஒருவருக்கு எளிதானது அல்ல, அவர் அதிக பந்துகளைப் பெறமாட்டார், அங்கு நடந்து சென்று எதிர்பார்த்ததைச் செய்வது ஒரு அற்புதமான பேட்டிங் முயற்சியாகும்.” என அவர் பதிலளித்தார்.