5 பொருள் போதும் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் போல இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

0
64

கற்றாழை முகத்திற்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் ஆகியவற்றை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. கடைகளில் விற்கும் செயற்கையான கற்றாழை ஜெல் களை பயன்படுத்துவதற்கு பதிலாக நம் வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி என்பது தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

1. கற்றாழை மடல் 3

2. வேப்பிலை ஒரு கைப்பிடி

3. துளசி ஒரு கைப்பிடி

4. ஜெலட்டின் பவுடர் அல்லது சைனா கிராஸ்

5. தேங்காய் எண்ணெய்

செய்முறை:

1. முதலில் கற்றாழை மடல்களை எடுத்து இருபுறமும் உள்ள முட்களை எடுத்து விட்டு உள்ளே உள்ள கற்றாழை சோற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். எந்த கட்டி தன்மையும் இல்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

2. பின் மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி துளசி இலைகளை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். வேப்பிலை மற்றும் துளசி முகத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி பருக்களை அண்டவிடாமல் தடுக்கிறது. மேலும் ஒரு நறுமணத்திற்காக இதை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

3. இப்பொழுது கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து அதனுடன் வேப்பிலை மற்றும் துளசி சாறையும் சேர்த்து விட்டு பின் எந்த அளவு கற்றாழை ஜெல்லை எடுத்தோமோ அந்த அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொதித்த பின் தண்ணீர் சேர்க்கக் கூடாது.

4. இப்பொழுது இதனை நன்றாக கொதிக்க விடவும். நாம் சேர்த்த தண்ணீர் நன்கு சுண்டும் வரை கொதிக்க விடலாம்.

5. இதனுடன் ஜெலட்டின் பவுடர் அல்லது சைனா கிராஸ் என்று சொல்லக்கூடிய ஜெல் வடிவமைப்பைக் கொண்டு வருவதற்காக ஜெலட்டின் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஜெலட்டின் பவுடரில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்படுவதால் சைனா கிராஸ் என்று சொல்லக்கூடிய ஜெல்லைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

6. நன்கு கொதித்தவுடன் இறக்கி ஆற வைக்கவும்.

7. பின் இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் ஏதாவது ஒரு எண்ணெய்யை ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.

8. வெயிலில் அல்லது பிரிட்ஜில் கூட வைத்துக் கொள்ளலாம்.

9. அரை மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது உங்களுக்கு கடைகளில் விற்க கூடிய ஜெல்லை போலவே இருக்கும்.

10. உங்களுக்கு ஆங்காங்கே கட்டி தன்மையைப் போல இருந்தால் மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைத்து கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இதனை நீங்கள் முகத்திற்கு தினமும் பயன்படுத்தி வரும் பொழுது உங்கள் முகம் பளபளப்பாக மின்னுவதை உங்களது கண்கூடாகவே பார்க்க முடியும்.

author avatar
Kowsalya