TNPSC ஆணையத்தில் ரூ.1 லட்சம் வரையிலான ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா ? இதோ உங்களுக்கான அப்டேட் !

0
81

1) நிறுவனம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC)

2) இடம்:

சென்னை

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளது.

4) பணிகள்:

இளநிலை மறுவாழ்வு அலுவலர் (Junior Rehabilitation Officer)

5) பணிக்கான கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டியது அவசியம்.

6) வயது வரம்பு:

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 37 வயது இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7) சம்பளம்:

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளருக்கு மாதந்தோறும் ரூ.35,600 முதல் ரூ.1,30,800 வரை சம்பளமாக வழங்கப்படும்.

8) விண்ணப்ப கட்டணம்:

பதிவு கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக்கட்டணம் ரூ.100 என மொத்தம் சேர்த்து கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

9) தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழித்தேர்வின் மூலமாக தகுதியான நபர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

10) விண்ணப்பிக்கும் செயல்முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தேவையான தகவல்களை நிரப்பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

07.01.2023

author avatar
Savitha