விவசாயிகளை வழி நடத்துவது அவர்களை சுற்றி இருக்கின்ற அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்…! ஜேபி நட்டா கருத்து…!

0
44

உங்களை தவறான வழியில் நடத்தி வருபவர்கள் சில தேசவிரோத அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். என்று பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல்களிலும் சாலைமறியல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் ஆனால் இது சில தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைதான் விவசாயிகளின் நடவடிக்கை அல்ல என்று பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்திருக்கிறார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் விவசாயிகளின் கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் ஜேபி நட்டா பேசியதாவது இது பஞ்சாப் மாநில விவசாயிகளின் இயக்கம் இல்லை இது ஒரு தேச விரோத சக்திகளின் இயக்கம் என்று தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் மண்டிகளில் விவசாயிகளால் மற்ற இடைத்தரகர்களை சமாளிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதற்குப் பெயர்தான் அடிமைத்தனமாக வைத்திருப்பது. இந்த அடிமைத்தனத்தில் இருந்து தான் பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளை விடுவித்து இருக்கின்றார். தங்களை வழி நடத்துபவர்கள் தங்களை சுற்றி உள்ள அரசியல்வாதிகள் தான் என்பதனை விவசாயிகள் நினைவு கூற வேண்டும். இவர்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு நண்பர்கள் அல்ல நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் நாம் அயல்நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கி இருக்கின்றோம். அதாவது நம்மிடம் ஒரு சரியான அமைப்பு இல்லை.

ஆனாலும் பசுமை புரட்சி என்ற ஒற்றை புள்ளியில் நம் விவசாயிகள் ஒன்றிணைந்து இந்திய நாட்டின் தேவையை மட்டும் நிவர்த்தி செய்ய வில்லை. உலக அளவில் இருக்கின்ற அந்நிய நாடுகளுக்கும் உணவு அளித்து வருகின்றோம், என இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்திய நாட்டின் ஆன்மா விவசாயிகளிடம் தான் இருக்கின்றது இந்தியாவை நிலைகொள்ள செய்வது விவசாயிகள்தான் ஆனாலும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளில் நீண்ட காலமாக அக்கறை இல்லாமல் இருப்பது என்பது உண்மைதான் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு pm-kisan சாம்மன் நிதி திட்டம் மூலமாக சுமார் 10 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் சுமார் 6000 செலுத்தி இருக்கின்றது. சுவாமிநாதனின் அறிக்கை என்பது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு மூலையில் தான் இருந்தது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அறிக்கையை அமல்படுத்துவதற்கான முயற்சியை முன்னெடுத்தார். முதல் முறையாக விவசாயிகளின் செலவில் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்கி இருக்கின்றார் என ஜேபி நட்டா தெரிவித்திருக்கின்றார்.