ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்!

0
55

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்!

கூகுள் பிளே ஸ்டோரில்,ஜோக்கர் மால்வேரால் பல செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பணம் திருடுபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக கலிபோர்னியாவை சேர்ந்த ஐடி பாதுகாப்பு நிறுவனமான ZScaler என்னும் நிறுவனம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல செயலிகளை ஜோக்கர் என்னும் மால்வேரானது தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த செயலிகளை தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும் ஏற்கனவே உங்கள் போனில் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்திருந்தால்,
பயனாளர்களுக்கு தெரியாமல் பயனாளர்களின் எஸ்எம்எஸ்,கான்டக்ட் நம்பர்,உங்கள் போனின் ஒட்டுமொத்த தகவல்களும்,பிரீமியம் வயர்லெஸ் அப்ளிகேஷன் புரோட்டோகால் (WAP) சேவைகளுக்கு தெரியாமல் திருடப்படும்.இதனால் உங்கள் பணமும் தகவலும் திருடு போகும் அபாயம் அதிகம் உள்ளது.சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 17 செயலிகளில் இந்த மால்வேர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது ஒவ்வொரு முறையும் மாற்றப்பட்ட கோடிங் மூலம் செயல்படுவதால்,இந்த மால்வரை நீக்கினாலும் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருப்பதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.எனவே இந்த செயலிகளை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுமாறு Zஸ்கேலார் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த செயலியின் பட்டியல்கள் கீழே:

Style Photo Collage

Blue Scanner

Mint Leaf Message-Your Private Message

Direct Messenger

Tangram App Lock

Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons

One Sentence Translator – Multifunctional Translator

Meticulous Scanner

Private SMS

Desire Translate

All Good PDF Scanner

Talent Photo Editor – Blur focus

Part Message

Hummingbird PDF Converter – Photo to PDF

Paper Doc Scanner

Care Message

All Good PDF Scanner

 

author avatar
Pavithra